முக்கியச் செய்தி
Island edition
··
LankaNews
அரசியல்

‘Rebuilding Sri Lanka’ குழுவின் 5ஆவது கூட்டம்

‘Rebuilding Sri Lanka’ ஜனாதிபதி செயலணியின் கீழ் அமைக்கப்பட்ட சமூக உட்கட்டமைப்பு புனரமைப்பு உபகுழு ஐந்தாவது முறையாகக் கூடியுள்ளது. கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர்…

By Site Administrator1 நிமிட வாசிப்பு
‘Rebuilding Sri Lanka’ குழுவின் 5ஆவது கூட்டம்

‘Rebuilding Sri Lanka’ ஜனாதிபதி செயலணியின் கீழ் அமைக்கப்பட்ட சமூக உட்கட்டமைப்பு புனரமைப்பு உபகுழு ஐந்தாவது முறையாகக் கூடியுள்ளது.

கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் கலாநிதி உபாலி பன்னில தலைமையில் இந்த விசேட கூட்டம் நேற்று (20) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

டிட்வா சூறாவளியினால் சேதமடைந்த சமூக உட்கட்டமைப்பு வசதிகளை மீளக் கட்டியெழுப்பும் நடவடிக்கைகளின் முன்னேற்றம் மற்றும் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

அனர்த்தத்துக்குப் பின்னரான காலப்பகுதியில் கல்வி, சுகாதாரம், கலாசாரம் மற்றும் பொது வசதிகளை மீளமைக்கும் நடவடிக்கைகளின் முன்னேற்றத்தை கண்காணித்து பிரதான குழுவுக்கு அறிக்கை சமர்ப்பிப்பது இந்த உபகுழுவின் முக்கிய பொறுப்பாகும்.

கடுமையாக பாதிக்கப்பட்ட மாகாணங்களில் புனரமைப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்துவது தொடர்பிலும் இங்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

பகிர்:

About Site Administrator

Lanka News administrator

தொடர்புடைய கட்டுரைகள்

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்கவும்

முதலில் கருத்து தெரிவிக்கவும்