‘கிரிஷ்’ (Krrish) வர்த்தக நடவடிக்கை தொடர்பான வழக்கில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச நான்காவது சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ளார்.
இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழு கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்தில் மன்றில் மனுவொன்றை தாக்கல் செய்ததைத் தொடர்ந்து, அவர் நான்காவது சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ளார்.
இதன்படி, குறித்த வழக்கில் நாமல் ராஜபக்சவை நான்காவது சந்தேகநபராக இணைப்பதற்கு இலஞ்ச ஊழல் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த வழக்கு தொடர்பான விசாரணைகளும் நீதிமன்ற நடவடிக்கைகளும் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.




