முக்கியச் செய்தி
Island edition
··
LankaNews
வணிகம்

பொலிஸ் உடல் கேமரா டெண்டர் குறித்து குற்றச்சாட்டு

பொலிஸ் அதிகாரிகளுக்காக 500 உடலில் அணியும் கேமராக்களை (Body Cameras) கொள்வனவு செய்வதற்கான டெண்டர் ஆவணங்களைத் தயாரிக்கும் போது, ChatGPT மூலம் பெறப்பட்ட தகவல்கள் போதிய ஆய்வின்றி பயன்படுத்தப்பட்டுள்ளதாக ம…

By Site Administrator2 நிமிட வாசிப்பு
பொலிஸ் உடல் கேமரா டெண்டர் குறித்து குற்றச்சாட்டு

பொலிஸ் அதிகாரிகளுக்காக 500 உடலில் அணியும் கேமராக்களை (Body Cameras) கொள்வனவு செய்வதற்கான டெண்டர் ஆவணங்களைத் தயாரிக்கும் போது, ChatGPT மூலம் பெறப்பட்ட தகவல்கள் போதிய ஆய்வின்றி பயன்படுத்தப்பட்டுள்ளதாக மக்கள் போராட்ட இயக்கத்தின் செயற்பாட்டாளர் வசந்த முதலிகே குற்றம் சாட்டியுள்ளார்.

ஊடக சந்திப்பொன்றில் கருத்து தெரிவித்த அவர், உடல் கேமராக்கள், அவற்றின் தொழில்நுட்ப விவரக்குறிப்புகள் மற்றும் கொள்வனவின் நோக்கங்கள் தொடர்பான நிபந்தனைகள் அடங்கிய Terms of Reference (TOR) ஆவணத்தைத் தயாரிப்பதில் செயற்கை நுண்ணறிவு கருவிகள் மூலம் பெறப்பட்ட தகவல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

அத்தகவல்கள் உரிய தொழில்நுட்ப ஆய்வு அல்லது திருத்தம் இன்றி டெண்டர் ஆவணத்தில் நேரடியாக சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

பொலிஸ் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளுக்காக 500 உடல் கேமராக்கள் மற்றும் 70 Docking Stations கொள்வனவு செய்வதற்காக பொலிஸ் கொள்வனவுப் பிரிவு கடந்த மார்ச் மாதம் டெண்டர் கோரியதாக வசந்த முதலிகே தெரிவித்தார்.

பொலிஸ் அதிகாரிகள் சோதனைகள் மற்றும் நடவடிக்கைகளில் ஈடுபடும் போது உடல் கேமராக்களை அணிந்து கொள்வதன் மூலம் காட்சிகளைப் பதிவு செய்து, பின்னர் அவற்றை சாட்சியங்களாகப் பயன்படுத்த முடியும் என்றும் அவர் கூறினார்.

பொலிஸ் காவலில் இடம்பெறும் மரணங்கள் மற்றும் பொலிஸ் நிலையங்களில் இடம்பெறுவதாகக் கூறப்படும் வன்முறைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்படும் நிலையில், உடல் கேமராக்களை அறிமுகப்படுத்துவதும் பொலிஸ் நிலையங்களுக்குள் CCTV கேமராக்களை பொருத்துவதும் முக்கியமான நடவடிக்கைகள் என அவர் தெரிவித்தார்.

எனினும், பிரச்சினை உடல் கேமராக்களை அறிமுகப்படுத்தும் தீர்மானத்தில் அல்ல என்றும், அதற்காக முன்னெடுக்கப்படும் கொள்வனவு செயல்முறையிலேயே உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

டெண்டரில் இடம்பெற்றுள்ள தொழில்நுட்ப விவரக்குறிப்புகளில் குறைபாடுகள் காணப்படுவதாகவும், இதனால் கேமராக்களை முறையாகப் பயன்படுத்துவதில் சிக்கல்கள் ஏற்படக்கூடும் என்றும் அவர் குற்றம் சாட்டினார். மேலும், கொள்வனவு செயல்முறை ஒரு தரப்புக்கு சாதகமாக அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதனால், தற்போது முன்னெடுக்கப்படும் டெண்டர் செயல்முறையை இரத்து செய்து, தொழில்நுட்ப நிபுணர்களின் ஆய்வு மற்றும் ஆலோசனையுடன் புதிய கொள்வனவு செயல்முறையை ஆரம்பிக்குமாறு வசந்த முதலிகே கோரிக்கை விடுத்துள்ளார்.

பகிர்:

About Site Administrator

Lanka News administrator

தொடர்புடைய கட்டுரைகள்

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்கவும்

முதலில் கருத்து தெரிவிக்கவும்