இலங்கைக்கு மூன்று டன் காசநோய் எதிர்ப்பு மருந்துகளை இந்தியா நன்கொடையாக வழங்கியுள்ளது.
இந்த மருந்துத் தொகை நேற்று (28) இந்திய விமானப்படை விமானம் மூலம் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் பொது சுகாதாரக் கட்டமைப்புக்கு ஆதரவளிப்பதில் இந்தியா தொடர்ந்தும் உறுதியாக இருப்பதாகவும் ஜெய்சங்கர் தனது X (முன்னர் Twitter) பதிவில் தெரிவித்துள்ளார்.




