ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராக தன்னை அங்கீகரிக்குமாறு தயாசிறி ஜயசேகர முன்வைத்த கோரிக்கையை மேல் மாகாண சிவில் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
தன்னை கட்சியின் பொதுச் செயலாளராக அங்கீகரிக்குமாறு கோரி ஜயசேகர முன்னதாக கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்தார். அத்துடன், துமிந்த திசாநாயக்க பொதுச் செயலாளராகவும் நிமல் சிறிபால டி சில்வா தலைவராகவும் செயற்படுவதைத் தடுக்கும் இடைக்காலத் தடையுத்தரவை பிறப்பிக்குமாறும் அவர் கோரியிருந்தார்.
கொழும்பு மாவட்ட நீதிமன்றம் அவரது ஆரம்பக் கோரிக்கையை நிராகரித்ததைத் தொடர்ந்து, அந்தத் தீர்ப்புக்கு எதிராக ஜயசேகர மேல் மாகாண சிவில் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்திருந்தார்.
நேற்று (28) நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது, துமிந்த திசாநாயக்க மற்றும் நிமல் சிறிபால டி சில்வா ஆகியோருக்கு எதிராக இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பிக்கவும் நீதிமன்றம் மறுத்துள்ளது.
இந்த வழக்கின் ஆரம்ப விசாரணை 2027 ஜனவரி 8ஆம் திகதி நடைபெறவுள்ளது.




