22ஆவது திருத்தத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தாலும், தேசிய மக்கள் சக்தியுடன் (NPP) இணைந்து தொடர்ந்து கட்சிக்குள் செயற்படவுள்ளதாக அதன் நிறைவேற்றுச் சபை உறுப்பினரும் சட்டத்தரணியுமான லால் விஜேநாயக்க தினசரி ஆங்கிலப் பத்திரிகையொன்றிடம் தெரிவித்துள்ளார்.
எனினும், 22ஆவது திருத்தத்தை நிறைவேற்றுவதற்கு எதிராக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (BASL) முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு தொடர்ந்து ஆதரவளிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் ஜே.வி.பி. தலைவர் அனுர குமார திஸாநாயக்கவுடன் கலந்துரையாடல் ஒன்றை நடத்தியுள்ளதாகவும், கட்சியிலிருந்து விலகுவதற்கு எந்தவிதமான தயாரிப்பும் இல்லை என்றும் லால் விஜேநாயக்க உறுதிப்படுத்தியுள்ளார்.
அத்துடன், ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் எதிர்ப்புப் போராட்டங்களில் இணைந்து கொள்ள எதிர்பார்க்கவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.




