இரத்தினபுரி உடவளவை நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மேற்கொள்ளப்படும் பராமரிப்புப் பணிகள் காரணமாக நாளை (29) பல பகுதிகளில் நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
இதன்படி, நாளை காலை 10.00 மணி முதல் இரவு 7.00 மணி வரை 9 மணித்தியாலங்களுக்கு பின்வரும் பகுதிகளில் நீர் விநியோகம் தடை செய்யப்படும்.
சங்கபால
பனஹதூவ
கொலம்பகே ஆர
97ஆம் மைல் கல் பகுதி
98ஆம் மைல் கல் பகுதி
நீர் விநியோகம் தடை செய்யப்படுவதால் நுகர்வோருக்கு ஏற்படும் அசௌகரியத்திற்கு தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தனது கவலையைத் தெரிவித்துள்ளது.
மேலும், முன்கூட்டியே சேகரித்து வைக்கப்படும் நீரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறும் நுகர்வோரிடம் சபை கேட்டுக்கொண்டுள்ளது.




