முக்கியச் செய்தி
துபாயில் பதுங்கியிருந்த தேடப்படும் குற்றவாளி இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்கொழும்பு, கம்பஹாவில் சில பகுதிகளுக்கு நீர் விநியோகம் இடைநிறுத்தம்ஹேமரத்ன தேரருக்கு எதிரான வழக்கில் தடயவியல் அறிக்கைஇலங்கை கடலில் எண்ணெய், எரிவாயு ஆய்வுக்கு புதிய ஏலம்வெளிநாட்டிலிருந்து சந்தேகநபர் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்துபாயில் பதுங்கியிருந்த தேடப்படும் குற்றவாளி இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்கொழும்பு, கம்பஹாவில் சில பகுதிகளுக்கு நீர் விநியோகம் இடைநிறுத்தம்ஹேமரத்ன தேரருக்கு எதிரான வழக்கில் தடயவியல் அறிக்கைஇலங்கை கடலில் எண்ணெய், எரிவாயு ஆய்வுக்கு புதிய ஏலம்வெளிநாட்டிலிருந்து சந்தேகநபர் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்
Island edition
··
LankaNews
உலகம்

குடும்பத்தினரை கொல்ல ChatGPT பயன்படுத்திய சிறுவன்!

அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் மாநிலம் ஆக்டன் பகுதியில் தனது தாய் மற்றும் இளைய சகோதரரை கொலை செய்ததாக 17 வயதான அர்ஜுன் அரவிந்த் மீது இரண்டு கொலைக் குற்றச்சாட்டுகள் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்…

By Site Administrator1 நிமிட வாசிப்பு
குடும்பத்தினரை கொல்ல ChatGPT பயன்படுத்திய சிறுவன்!

அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் மாநிலம் ஆக்டன் பகுதியில் தனது தாய் மற்றும் இளைய சகோதரரை கொலை செய்ததாக 17 வயதான அர்ஜுன் அரவிந்த் மீது இரண்டு கொலைக் குற்றச்சாட்டுகள் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

45 வயதான சுதா வெங்கடேசன் மற்றும் 14 வயதான அவரது மகன் சித்தார்த் அரவிந்த் ஆகியோர் தங்களது வீட்டில் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த வழக்கு வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

விசாரணைகளின்போது, குறித்த சிறுவன் தனது குடும்பத்தினருக்கு எதிரான வன்முறை தொடர்பான கற்பனைகள் மற்றும் கதைகளை ஆராய்வதற்காக இணையத்தையும் ChatGPT-யையும் பயன்படுத்தியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குடும்ப உறுப்பினர்களுக்கு அச்சுறுத்தலாகத் தோன்றும் கதாபாத்திரங்கள் மற்றும் சூழ்நிலைகளைக் கொண்ட கற்பனை, கோதிக் பாணியிலான கதைகளையும் அவர் உருவாக்கியதாக கூறப்படுகிறது.

குடும்பத்தினரைத் தொடர்புகொள்ள முடியாத நிலையில் அர்ஜுனின் தந்தை பொலிஸாரைத் தொடர்புகொண்டதைத் தொடர்ந்து சம்பவம் தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார்.

எனினும், உயிரிழப்புகளுக்கான அதிகாரப்பூர்வ காரணம் தொடர்பான மருத்துவப் பரிசோதகரின் முடிவு இன்னும் வெளியாகவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகிர்:

About Site Administrator

Lanka News administrator

தொடர்புடைய கட்டுரைகள்

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்கவும்

முதலில் கருத்து தெரிவிக்கவும்