முக்கியச் செய்தி
Island edition
··
LankaNews
உலகம்

சீனாவின் ‘Zhuque-3’ ரொக்கெட் வெற்றிகரமாக தரையிறக்கம்

சீனாவின் விண்வெளித் தொழில்நுட்ப வரலாற்றில் முக்கிய திருப்புமுனையை ஏற்படுத்தும் வகையில், மீண்டும் பயன்படுத்தக்கூடிய ‘Zhuque-3’ ரொக்கெட்டை விண்ணில் ஏவி அதன் முதல் கட்டத்தை நிலத்தில் நிர்ணயிக்கப்பட்ட இடத…

By Site Administrator1 நிமிட வாசிப்பு
சீனாவின் ‘Zhuque-3’ ரொக்கெட் வெற்றிகரமாக தரையிறக்கம்

சீனாவின் விண்வெளித் தொழில்நுட்ப வரலாற்றில் முக்கிய திருப்புமுனையை ஏற்படுத்தும் வகையில், மீண்டும் பயன்படுத்தக்கூடிய ‘Zhuque-3’ ரொக்கெட்டை விண்ணில் ஏவி அதன் முதல் கட்டத்தை நிலத்தில் நிர்ணயிக்கப்பட்ட இடத்தில் வெற்றிகரமாகத் தரையிறக்க சீனா சாதித்துள்ளது.

வடமேற்கு சீனாவின் டொங்ஃபெங் (Dongfeng) வர்த்தக விண்வெளி புத்தாக்க முன்னோடி வலயத்திலிருந்து இந்த ரொக்கெட் இன்று (19) சீன நேரப்படி காலை 7.35 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது.

சீனா மேற்கொண்ட முதல் கட்டுப்படுத்தப்பட்ட தரைத்தள ரொக்கெட் தரையிறக்கமாக இது விண்வெளி வரலாற்றில் பதிவாகியுள்ளது. ‘Zhuque-3’ ரொக்கெட்டின் முதல் கட்டத்தில் விரிவாக்கக்கூடிய தரையிறங்கும் கால்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் ரொக்கெட்டை செங்குத்தாக தரையிறக்கி மீண்டும் பயன்படுத்த முடியும்.

கடந்த ஜூலை 10ஆம் திகதி ‘Long March-10B’ ரொக்கெட்டின் முதல் பகுதியை கடலில் அமைக்கப்பட்ட வலை ஒன்றின் உதவியுடன் வெற்றிகரமாக நிலைநிறுத்தியதைத் தொடர்ந்து சீனா மேற்கொண்ட மற்றுமொரு முக்கிய விண்வெளித் தொழில்நுட்ப சாதனையாக இது கருதப்படுகிறது.

இந்த புதிய தொழில்நுட்ப சாதனை விண்வெளி நடவடிக்கைகளுக்கான செலவைக் கணிசமாகக் குறைக்கவும், எதிர்காலத்தில் சீனாவின் வர்த்தக விண்வெளி நடவடிக்கைகளுக்கான தேவைகளை வெற்றிகரமாகப் பூர்த்தி செய்யவும் முக்கிய பங்காற்றும் என விண்வெளி நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

பகிர்:

About Site Administrator

Lanka News administrator

தொடர்புடைய கட்டுரைகள்

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்கவும்

முதலில் கருத்து தெரிவிக்கவும்