முக்கியச் செய்தி
துபாயில் பதுங்கியிருந்த தேடப்படும் குற்றவாளி இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்கொழும்பு, கம்பஹாவில் சில பகுதிகளுக்கு நீர் விநியோகம் இடைநிறுத்தம்ஹேமரத்ன தேரருக்கு எதிரான வழக்கில் தடயவியல் அறிக்கைஇலங்கை கடலில் எண்ணெய், எரிவாயு ஆய்வுக்கு புதிய ஏலம்வெளிநாட்டிலிருந்து சந்தேகநபர் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்துபாயில் பதுங்கியிருந்த தேடப்படும் குற்றவாளி இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்கொழும்பு, கம்பஹாவில் சில பகுதிகளுக்கு நீர் விநியோகம் இடைநிறுத்தம்ஹேமரத்ன தேரருக்கு எதிரான வழக்கில் தடயவியல் அறிக்கைஇலங்கை கடலில் எண்ணெய், எரிவாயு ஆய்வுக்கு புதிய ஏலம்வெளிநாட்டிலிருந்து சந்தேகநபர் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்
Island edition
··
LankaNews
உலகம்

பைடனின் புற்றுநோய் குறித்து மகன் வெளியிட்ட தகவல்

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு ஏற்பட்டுள்ள புரோஸ்டேட் புற்றுநோய் எலும்புகள் மற்றும் அதற்கு அப்பாலும் பரவியுள்ளதாகவும், அவர் கடுமையான வலியால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவரது மகன் ஹண்டர் பைடன் த…

By Site Administrator1 நிமிட வாசிப்பு
பைடனின் புற்றுநோய் குறித்து மகன் வெளியிட்ட தகவல்

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு ஏற்பட்டுள்ள புரோஸ்டேட் புற்றுநோய் எலும்புகள் மற்றும் அதற்கு அப்பாலும் பரவியுள்ளதாகவும், அவர் கடுமையான வலியால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவரது மகன் ஹண்டர் பைடன் தெரிவித்துள்ளார்.

BBC Newsnight நிகழ்ச்சிக்கு வழங்கிய நேர்காணலில் ஹண்டர் பைடன், தனது தந்தையின் புற்றுநோய் நிலைமை மேலும் மோசமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார். புற்றுநோய் அவரது உடல் முழுவதும் பரவியுள்ளதுடன், கடுமையான வலியை ஏற்படுத்தி பல்வேறு வழிகளில் அவரை பாதித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும், ஹண்டர் பைடனின் இந்தக் கருத்துகள் தொடர்பில் கருத்து தெரிவிப்பதை ஜோ பைடனின் ஊடகப் பேச்சாளர் நிராகரித்துள்ளார்.

2025 மே மாதத்தில், ஜோ பைடன் முதன்முறையாக தனக்கு தீவிரமான புரோஸ்டேட் புற்றுநோய் இருப்பதாகவும், அது எலும்புகளுக்கு பரவியுள்ளதாகவும் வெளிப்படுத்தினார். பின்னர் ஒக்டோபர் மாதத்தில் அவர் கதிர்வீச்சு சிகிச்சை மற்றும் ஹோர்மோன் சிகிச்சை பெற்று வருவதாக அவரது ஊடகப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்திருந்தார்.

2021 முதல் 2025 வரை அமெரிக்க ஜனாதிபதியாக பதவி வகித்த பைடன், 2020 ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றபோது அமெரிக்க ஜனாதிபதி பதவியை ஏற்ற வயதான நபராக பதிவானார்.

புற்றுநோய் நிலைமைக்கு மத்தியிலும், கடந்த ஜூன் மாதம் சிக்காகோவில் நடைபெற்ற பராக் ஒபாமா ஜனாதிபதி நூலகத்தின் திறப்பு விழாவில் பைடன் கலந்துகொண்டார். 2009 முதல் 2017 வரை ஒபாமா நிர்வாகத்தின் கீழ் துணை ஜனாதிபதியாகவும் அவர் பணியாற்றினார்.

அவரது ஜனாதிபதி பதவிக் காலம் தொடர்பான சுயசரிதை நூல் எதிர்வரும் நவம்பர் 17ஆம் திகதி வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகிர்:

About Site Administrator

Lanka News administrator

தொடர்புடைய கட்டுரைகள்

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்கவும்

முதலில் கருத்து தெரிவிக்கவும்