தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் மனைவி சங்கீதா, விவாகரத்து கோரி தாக்கல் செய்திருந்த மனுவை வாபஸ் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
விஜய் அரசியலில் ஈடுபட்டு வரும் நிலையில், அவரது குடும்ப வாழ்க்கை தொடர்பாக பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், விவாகரத்து மனு வாபஸ் பெறப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் விஜய் ரசிகர்கள் மற்றும் தமிழக வெற்றிக் கழகத் தொண்டர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் காவிரி பிரச்னை, தொகுதி மறுவரையறை மற்றும் சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் உள்ளிட்ட அரசியல் விவகாரங்களை விஜய் எதிர்கொண்டு வரும் நிலையில், இந்த விவாகரத்து மனு வாபஸ் தொடர்பான செய்தி அவரது தனிப்பட்ட குடும்ப வாழ்க்கை குறித்த விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அமைந்துள்ளதாக மூத்த பத்திரிகையாளர் வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
மீடியா சர்கிள் யூடியூப் சேனலுக்கு வழங்கிய பேட்டியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும், விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் முன்னதாக அளித்த பேட்டியில், தனது தந்தையின் வெற்றியால் குடும்பத்தினருக்கு அதிக பொறுப்பு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டிருந்ததாக வெங்கடேசன் கூறியுள்ளார். இந்தக் கருத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா மற்றும் மகள் திவ்யாவும் உள்ளடங்குவதாக அவர் தெரிவித்துள்ளார்.
விஜய் அரசியலுக்கு வந்த பின்னர் குடும்பத்தை கவனிப்பதில்லை என அவருக்கு எதிராக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.




