முக்கியச் செய்தி
Island edition
··
LankaNews
பொழுதுபோக்கு

ரியோ ராஜின் ‘ராம் IN லீலா’ ஆகஸ்ட் 21 வெளியீடு

நடிகர் ரியோ ராஜ் நடிக்கும் ‘ராம் IN லீலா’ திரைப்படம் ஆகஸ்ட் 21 ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் வெளியீடு குறித்து ரியோ ராஜ் தனது X தளத்தில் வெளிய…

By Site Administrator1 நிமிட வாசிப்பு
ரியோ ராஜின் ‘ராம் IN லீலா’ ஆகஸ்ட் 21 வெளியீடு

நடிகர் ரியோ ராஜ் நடிக்கும் ‘ராம் IN லீலா’ திரைப்படம் ஆகஸ்ட் 21 ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

படத்தின் வெளியீடு குறித்து ரியோ ராஜ் தனது X தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தீவிரமான கொண்டாட்டத்துக்கு தயாராகுங்கள். ‘ராம் IN லீலா’ திரையரங்குகளில் ஆகஸ்ட் 21 ஆம் திகதி வெளியாகிறது” என தெரிவித்துள்ளார்.

‘ஆண் பாவம் பொல்லாதது’ திரைப்படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, ரியோ ராஜ் ‘ராம் IN லீலா’ திரைப்படத்தில் நடித்துள்ளார்.

ட்ரைடன்ட் ஆர்ட்ஸ் மற்றும் ஒய்வா எண்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரித்துள்ள இந்த திரைப்படத்தில் வர்திகா ஜெயின் கதாநாயகியாக நடித்துள்ளார்.

ராமச்சந்திரன் கண்ணன் இயக்கியுள்ள இப்படத்திற்கு மல்லிகா அர்ஜுன் ஒளிப்பதிவாளராகவும், அன்கிட் மேனன் இசையமைப்பாளராகவும் பணியாற்றியுள்ளனர்.

பகிர்:

About Site Administrator

Lanka News administrator

தொடர்புடைய கட்டுரைகள்

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்கவும்

முதலில் கருத்து தெரிவிக்கவும்