தமிழ்நாடு முதலமைச்சரும் பிரபல தமிழ் திரைப்பட நடிகருமான விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா ஆகியோரின் விவாகரத்து வழக்கு இன்று (ஆகஸ்ட் 7) செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
இதற்கு முன்னர் நடைபெற்ற விசாரணையின் போது, நீதிமன்றம் வழக்கை ஆகஸ்ட் 7 ஆம் திகதிக்கு ஒத்திவைத்திருந்தது.
பாதுகாப்பு காரணங்களை சுட்டிக்காட்டி, காணொலி மாநாடு (Video Conference) மூலம் விசாரணையில் பங்கேற்க அனுமதி வழங்குமாறு இரு தரப்பினரும் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதன்படி, குறித்த கோரிக்கை தொடர்பிலும் இன்றைய விசாரணையின் போது கவனம் செலுத்தப்படவுள்ளது.




