முக்கியச் செய்தி
Island edition
··
LankaNews
அரசியல்

அர்ச்சுனா இராமநாதனுக்கு நீதிமன்றம் பிடியாணை

யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனுக்கு பிடியாணை பிறப்பிக்க கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (24) நடவடிக்கை எடுத்துள்ளது. கோட்டை பொலிஸ் அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த…

By Site Administrator1 நிமிட வாசிப்பு
அர்ச்சுனா இராமநாதனுக்கு நீதிமன்றம் பிடியாணை

யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனுக்கு பிடியாணை பிறப்பிக்க கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (24) நடவடிக்கை எடுத்துள்ளது.

கோட்டை பொலிஸ் அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த சம்பவம் தொடர்பில் நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கில் அவர் ஆஜராகாத காரணத்தினால் இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது நாடாளுமன்ற உறுப்பினர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. மேலும், அவருக்கான பிணையாளர்களும் நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, அர்ச்சுனா இராமநாதனுக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்க கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பகிர்:

About Site Administrator

Lanka News administrator

தொடர்புடைய கட்டுரைகள்

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்கவும்

முதலில் கருத்து தெரிவிக்கவும்