முக்கியச் செய்தி
Island edition
··
LankaNews
விளையாட்டு

இலங்கை பொலிஸ் குத்துச்சண்டை போட்டி 23ஆம் திகதி ஆரம்பம்

இலங்கை பொலிஸ் பிரிவுகளுக்கிடையிலான சௌபிகின் (Dawbiggin) சவால் கிண்ண குத்துச்சண்டை போட்டி 2026 ஜூலை 23, 24 மற்றும் 25ஆம் திகதிகளில் களுத்துறை இலங்கை பொலிஸ் கல்லூரி குத்துச்சண்டை அரங்கில் நடைபெறவுள்ளது.…

By Site Administrator1 நிமிட வாசிப்பு
இலங்கை பொலிஸ் குத்துச்சண்டை போட்டி 23ஆம் திகதி ஆரம்பம்

இலங்கை பொலிஸ் பிரிவுகளுக்கிடையிலான சௌபிகின் (Dawbiggin) சவால் கிண்ண குத்துச்சண்டை போட்டி 2026 ஜூலை 23, 24 மற்றும் 25ஆம் திகதிகளில் களுத்துறை இலங்கை பொலிஸ் கல்லூரி குத்துச்சண்டை அரங்கில் நடைபெறவுள்ளது.

பெண்கள் மற்றும் ஆண்கள் பிரிவுகளுக்கென தனித்தனியாக நடத்தப்படும் இந்த போட்டித் தொடரின் ஆரம்ப நிகழ்வு ஜூலை 23ஆம் திகதி மாலை 6.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.

பொலிஸ் விசேட பணியகம் மற்றும் பயிற்சி மற்றும் உயர் பயிற்சிகளுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சம்பத் குமார லியனகே தலைமையில் இந்த ஆரம்ப நிகழ்வு நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இப்போட்டியை ஊடகங்களில் செய்தியாக வெளியிடுவதற்காக தமது பிராந்திய ஊடகவியலாளர்களை பங்கேற்கச் செய்யுமாறு பொலிஸ் ஊடகப் பிரிவு ஊடக நிறுவனங்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

பகிர்:

About Site Administrator

Lanka News administrator

தொடர்புடைய கட்டுரைகள்

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்கவும்

முதலில் கருத்து தெரிவிக்கவும்