முக்கியச் செய்தி
Island edition
··
LankaNews
விளையாட்டு

சாமிக்கவின் DNA வழக்கில் மேன்முறையீடு

இலங்கை கிரிக்கெட் வீரர் சாமிக்க கருணாரத்னவுக்கு எதிரான வழக்கில் DNA பரிசோதனைக்காக இரத்த மாதிரி வழங்க உத்தரவிடுமாறு கோரிய மனுவை நிராகரித்த கொழும்பு மாவட்ட நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக கொழும்பு சிவில் மே…

By Site Administrator1 நிமிட வாசிப்பு
சாமிக்கவின் DNA வழக்கில் மேன்முறையீடு

இலங்கை கிரிக்கெட் வீரர் சாமிக்க கருணாரத்னவுக்கு எதிரான வழக்கில் DNA பரிசோதனைக்காக இரத்த மாதிரி வழங்க உத்தரவிடுமாறு கோரிய மனுவை நிராகரித்த கொழும்பு மாவட்ட நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக கொழும்பு சிவில் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றத்தில் மேன்முறையீடு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

DNA பரிசோதனை நடத்துவதற்கு போதுமான மற்றும் நியாயமான காரணங்கள் முன்வைக்கப்படவில்லை எனத் தீர்மானித்த கொழும்பு மாவட்ட நீதிமன்றம், முன்னர் குறித்த கோரிக்கையை நிராகரித்திருந்தது.

இந்த வழக்கை விமானப் பணிப்பெண்ணான ரசிகா செவ்வந்தி தாக்கல் செய்துள்ளார். தனது குழந்தையின் தந்தை சாமிக்க கருணாரத்ன என அறிவிக்குமாறு அவர் நீதிமன்றத்திடம் கோரியுள்ளார்.

சாமிக்க கருணாரத்னவை குறித்த குழந்தையின் தந்தையாக அறிவிக்குமாறும், அவரது பெயரைத் தந்தையாகக் குறிப்பிட்டு பிறப்புச் சான்றிதழ் வழங்குமாறு பதிவாளர் நாயகத்திற்கு உத்தரவிடுமாறும் அவர் தனது மனுவில் கோரியுள்ளார்.

2023ஆம் ஆண்டு முதல் தமக்கும் சாமிக்க கருணாரத்னவுக்கும் இடையில் உறவு இருந்ததாகவும், தாம் கர்ப்பமடைந்த பின்னர் அவர் தன்னை ஏற்க மறுத்ததாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

எனினும், சாமிக்க கருணாரத்ன இந்தக் குற்றச்சாட்டுகளை தொடர்ந்தும் மறுத்து வருவதுடன், DNA பரிசோதனைக்கு உட்படுவதற்கும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

பகிர்:

About Site Administrator

Lanka News administrator

தொடர்புடைய கட்டுரைகள்

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்கவும்

முதலில் கருத்து தெரிவிக்கவும்