முக்கியச் செய்தி
Island edition
··
LankaNews
விளையாட்டு

ருமேஷ் தரங்கவின் ஈட்டிகள் சேதம்: Turkish Airlines கவலை

இலங்கை தடகள வீரர் ருமேஷ் தரங்க நாடு திரும்பியபோது அவரது விளையாட்டு உபகரணங்களுக்கு ஏற்பட்ட சேதம் தொடர்பில் Turkish Airlines நிறுவனம் கவலை தெரிவித்துள்ளது. துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச…

By Site Administrator1 நிமிட வாசிப்பு
ருமேஷ் தரங்கவின் ஈட்டிகள் சேதம்: Turkish Airlines கவலை

இலங்கை தடகள வீரர் ருமேஷ் தரங்க நாடு திரும்பியபோது அவரது விளையாட்டு உபகரணங்களுக்கு ஏற்பட்ட சேதம் தொடர்பில் Turkish Airlines நிறுவனம் கவலை தெரிவித்துள்ளது.

துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் நேற்று (15) துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின் அதிகாரிகள் மற்றும் Turkish Airlines நிறுவனத்தின் பிரதிநிதிகளுக்கு இடையில் இடம்பெற்ற சந்திப்பின்போது, அந்த நிறுவனத்தின் அதிகாரிகள் தமது கவலையை வெளிப்படுத்தியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தேவையான நிறுவன ரீதியான விசாரணைகளை முன்னெடுப்பதுடன், ஏற்பட்ட சேதத்தை உரிய முறையில் மதிப்பீடு செய்து, அதற்கான இழப்பீட்டை விரைவாக வழங்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஹங்கேரியில் நடைபெற்ற World Athletics Ultimate Championship போட்டித் தொடரைத் தொடர்ந்து ருமேஷ் தரங்க நேற்று (15) அதிகாலை மீண்டும் நாடு திரும்பியிருந்தார்.

எனினும், போட்டிகளுக்காக அவர் எடுத்துச் சென்ற ஐந்து ஈட்டிகளும் விமானப் பயணத்தின்போது முழுமையாக சேதமடைந்திருந்தமை தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.

அந்த ஐந்து ஈட்டிகளின் பெறுமதி சுமார் 20 இலட்சம் ரூபாய் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகிர்:

About Site Administrator

Lanka News administrator

தொடர்புடைய கட்டுரைகள்

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்கவும்

முதலில் கருத்து தெரிவிக்கவும்