முக்கியச் செய்தி
Island edition
··
LankaNews
விளையாட்டு

குசல் மெண்டிஸ் தலைமையில் இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு புதிய சங்கம்

இலங்கை தொழில்முறை கிரிக்கெட் வீரர்களின் சங்கம் ஒன்று புதிதாக ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதன் ஆரம்ப தலைவராக இலங்கை மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் கிரிக்கெட் அணியின் தற்போதைய தலைவர் குசல் மெண…

By Site Administrator1 நிமிட வாசிப்பு
குசல் மெண்டிஸ் தலைமையில் இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு புதிய சங்கம்

இலங்கை தொழில்முறை கிரிக்கெட் வீரர்களின் சங்கம் ஒன்று புதிதாக ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன் ஆரம்ப தலைவராக இலங்கை மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் கிரிக்கெட் அணியின் தற்போதைய தலைவர் குசல் மெண்டிஸ் நியமிக்கப்பட்டுள்ளதாக கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் தலைவி சமரி அத்தபத்து மற்றும் சகலதுறை வீரர் வனிந்து ஹசரங்க ஆகியோரும் புதிய சங்கத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக கிரிக்கெட் வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

இந்த சங்கம் எதிர்காலத்தில் உலக கிரிக்கெட் வீரர்கள் சங்கத்துடனும் இணைந்து செயற்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பகிர்:

About Site Administrator

Lanka News administrator

தொடர்புடைய கட்டுரைகள்

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்கவும்

முதலில் கருத்து தெரிவிக்கவும்