முக்கியச் செய்தி
Island edition
··
LankaNews
அரசியல்

ஜாலிய விக்கிரமசூரியவுக்கு மீண்டும் பிடியாணை

அரசாங்க நிதியை முறைகேடாக பயன்படுத்திய சம்பவம் தொடர்பான வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருக்கும் அமெரிக்காவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் ஜாலிய விக்கிரமசூரியவை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப…

By Site Administrator1 நிமிட வாசிப்பு
ஜாலிய விக்கிரமசூரியவுக்கு மீண்டும் பிடியாணை

அரசாங்க நிதியை முறைகேடாக பயன்படுத்திய சம்பவம் தொடர்பான வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருக்கும் அமெரிக்காவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் ஜாலிய விக்கிரமசூரியவை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (22) மீண்டும் பிடியாணை பிறப்பித்துள்ளது.

குறித்த வழக்கு தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனைகளைப் பெற்று, எதிர்வரும் டிசம்பர் 09ஆம் திகதி நீதிமன்றத்தில் விடயங்களை முன்வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் பசன் அமரசேன குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.

அரசாங்க நிதியை முறைகேடாக பயன்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் சந்தேகநபராக ஜாலிய விக்கிரமசூரிய நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்த நிலையில், பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜராகாத காரணத்தினால் இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பகிர்:

About Site Administrator

Lanka News administrator

தொடர்புடைய கட்டுரைகள்

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்கவும்

முதலில் கருத்து தெரிவிக்கவும்