முக்கியச் செய்தி
வெள்ளி, 31 ஜூலை, 2026
··
அரசியல்

முன்னாள் பொலிஸ்மா அதிபர் மரணம்: புதிய தகவல்

முன்னாள் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்னவின் மரணம் தொடர்பாக Sunday Island பத்திரிகை புதிய தகவல்களை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையின்படி, அவரது தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரியின் புதிய துப்பாக்கியை பரி…

By Site Administrator··1 நிமிட வாசிப்பு
முன்னாள் பொலிஸ்மா அதிபர் மரணம்: புதிய தகவல்

முன்னாள் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்னவின் மரணம் தொடர்பாக Sunday Island பத்திரிகை புதிய தகவல்களை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையின்படி, அவரது தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரியின் புதிய துப்பாக்கியை பரிசோதித்துக் கொண்டிருந்தபோது அது தவறுதலாக வெடித்ததால் மார்பில் குண்டு பாய்ந்து உயிரிழப்பு ஏற்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் நிகழ்ந்த நேரத்தில் பாதுகாப்பு அதிகாரி வீட்டிற்குள் சென்றிருந்ததாகவும், துப்பாக்கிச் சத்தம் கேட்டதைத் தொடர்ந்து முன்னாள் பொலிஸ்மா அதிபர் வரந்தாவில் விழுந்திருந்ததாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும், அவர் மனஅழுத்தத்தில் இருந்ததாக எந்த அறிகுறியும் இல்லை என்றும், குடும்பத்தினரும் நண்பர்களும் தற்கொலை செய்யக்கூடிய காரணம் எதையும் காணவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சம்பவம் தொடர்பான பொலிஸ் விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், பிரேதப் பரிசோதனை அறிக்கை கிடைத்த பின்னரே இறுதி முடிவு எடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பகிர்:

About Site Administrator

Lanka News administrator

தொடர்புடைய கட்டுரைகள்

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்கவும்

முதலில் கருத்து தெரிவிக்கவும்