மேற்கு பசிபிக் பெருங்கடலின் திறந்த கடற்பரப்பில் உருவான ‘டொல்பின்’ சூறாவளி தற்போது தென்மேற்கு ஜப்பானின் ஒகினாவா மாகாணத்தை பாதித்து வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
முதலாம் வகை சூறாவளியாக வகைப்படுத்தப்பட்டுள்ள ‘டொல்பின்’ மணிக்கு சுமார் 198 கிலோமீற்றர் வேகத்தில் வீசியதாக தெரிவிக்கப்படுகிறது.
சூறாவளியின் தாக்கம் காரணமாக கோஷிமா மற்றும் ஒகினாவா மாகாணங்களில் வசிக்கும் சுமார் 260,000 பேரை வெளியேற்ற அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
மேலும், மோசமான வானிலை காரணமாக 500க்கும் மேற்பட்ட விமானப் பயணங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
‘டொல்பின்’ சூறாவளி அடுத்த சில நாட்களில் கிழக்கு சீனக் கடற்கரையை அண்மிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக ஷாங்காய், ஷெஜியாங் மற்றும் ஃபுஜியான் பகுதிகளுக்கும் கடும் மழை மற்றும் வெள்ள அபாயம் தொடர்பான எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவிக்கின்றன.




