முக்கியச் செய்தி
Island edition
··
LankaNews
உலகம்

டொல்பின் சூறாவளி: சீனா 200 மில்லியன் யுவான் ஒதுக்கீடு

டொல்பின் சூறாவளியால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட சீனாவின் ஜெஜியாங் மாகாணத்தின் அபிவிருத்திப் பணிகளுக்காக அந்நாட்டு அரசாங்கம் 200 மில்லியன் யுவானை ஒதுக்கியுள்ளது. சூறாவளியால் சேதமடைந்த வீதிகள், பாடசாலைகள்…

By Site Administrator1 நிமிட வாசிப்பு
டொல்பின் சூறாவளி: சீனா 200 மில்லியன் யுவான் ஒதுக்கீடு

டொல்பின் சூறாவளியால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட சீனாவின் ஜெஜியாங் மாகாணத்தின் அபிவிருத்திப் பணிகளுக்காக அந்நாட்டு அரசாங்கம் 200 மில்லியன் யுவானை ஒதுக்கியுள்ளது.

சூறாவளியால் சேதமடைந்த வீதிகள், பாடசாலைகள் மற்றும் வைத்தியசாலைகள் உள்ளிட்ட பொது சேவை வசதிகளை புனரமைப்பதற்காக இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும், டொல்பின் சூறாவளியின் தாக்கம் காரணமாக ஜெஜியாங், ஜியாங்சு, அன்ஹுய், ஹெனான் மற்றும் ஹுபெய் மாகாணங்களில் தொடர்ந்து கடும் மழை பெய்யக்கூடும் என சீன வானிலை அதிகாரிகள் எதிர்வுகூறியுள்ளனர்.

பகிர்:

About Site Administrator

Lanka News administrator

தொடர்புடைய கட்டுரைகள்

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்கவும்

முதலில் கருத்து தெரிவிக்கவும்