முக்கியச் செய்தி
Island edition
··
LankaNews
உலகம்

கத்திக்குத்துக்கு இலக்கான விமானி 174 பேரைக் காப்பாற்றினார்

ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து இஸ்ரேல் நோக்கிப் பயணித்த flydubai FZ1073 விமானத்தில், துணை விமானியால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் நாசகார முயற்சியின்போது கத்திக்குத்துக்கு இலக்கான இந்தியாவைச் சேர்…

By Site Administrator1 நிமிட வாசிப்பு
கத்திக்குத்துக்கு இலக்கான விமானி 174 பேரைக் காப்பாற்றினார்

ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து இஸ்ரேல் நோக்கிப் பயணித்த flydubai FZ1073 விமானத்தில், துணை விமானியால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் நாசகார முயற்சியின்போது கத்திக்குத்துக்கு இலக்கான இந்தியாவைச் சேர்ந்த பிரதான விமானி ஸ்மிட் மச்சார், 174 பயணிகளின் உயிரைக் காப்பாற்றியதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

நேற்று (30) இடம்பெற்ற இந்தச் சம்பவத்தின்போது, துணை விமானி பிரதான விமானியை கத்தியால் தாக்கி, விமானத்தை விபத்துக்குள்ளாக்க முயன்றதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன்போது விமானம் 30 விநாடிகளுக்கும் குறைவான நேரத்தில் சுமார் 14,000 அடி (4,267 மீற்றர்) உயரத்திலிருந்து கீழ்நோக்கி வீழ்ந்துள்ளது.

பலத்த காயங்களுடன் இரத்தத்தில் தோய்ந்திருந்த போதிலும், ஸ்மிட் மச்சார் விமானி அறையின் கதவைத் திறக்க முடிந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு X தளத்தில் வெளியிட்ட பதிவில், மச்சாரின் துணிச்சலைப் பாராட்டியதுடன், இஸ்ரேல் மற்றும் ஏனைய நாடுகளைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட 174 பேரின் உயிரைக் காப்பாற்றியதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் மச்சாரின் துணிச்சலைப் பாராட்டி, அவரை “உண்மையான வீரர்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மச்சார் தற்போது தபூக் நகரிலுள்ள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன், அவரது உடல்நிலை முன்னேற்றமடைந்து வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மும்பையைச் சேர்ந்த மச்சார், flydubai நிறுவனத்தில் இணைவதற்கு முன்னர் இந்தியாவின் SpiceJet விமான நிறுவனத்தில் 11 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிய அனுபவமிக்க விமானி எனத் தெரிவிக்கப்படுகிறது.

இரு விமானிகளுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலுக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை. சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதால், ஆதாரமற்ற கருத்துகளை வெளியிடுவதைத் தவிர்க்குமாறு flydubai நிறுவனம் கோரியுள்ளது.

விசாரணைகள் நிறைவடையும் வரை இஸ்ரேலுக்கான மற்றும் இஸ்ரேலில் இருந்து இயக்கப்படும் அனைத்து விமான சேவைகளையும் தற்காலிகமாக இடைநிறுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி சேவை தெரிவித்துள்ளது.

பகிர்:

About Site Administrator

Lanka News administrator

தொடர்புடைய கட்டுரைகள்

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்கவும்

முதலில் கருத்து தெரிவிக்கவும்