பொலிஸ் அனுமதிச் சான்றிதழ் விண்ணப்பங்கள் தொடர்பில் பொதுமக்கள் விசாரணைகளை மேற்கொள்வதற்காக இலங்கை பொலிஸார் புதிய WhatsApp இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளனர்.
பொலிஸ் தலைமையகத்தின் பொலிஸ் அனுமதிச் சான்றிதழ் பிரிவு தெரிவித்ததாவது, இந்தப் புதிய வசதி 2026 செப்டம்பர் 23ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
இதன்படி, விண்ணப்பதாரர்கள் தங்களது பொலிஸ் அனுமதிச் சான்றிதழ் விண்ணப்பங்கள் தொடர்பான தகவல்களை சமர்ப்பிப்பதுடன், விசாரணைகளையும் WhatsApp செய்திகள் மூலம் மேற்கொள்ள முடியும்.
இதற்காக பொலிஸ் அனுமதிச் சான்றிதழ் பிரிவை 071-8595950 என்ற WhatsApp இலக்கத்தின் ஊடாக தொடர்புகொள்ள முடியும்.
இந்த இலக்கம் WhatsApp செய்திகள் அனுப்புவதற்கு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர்.




