முக்கியச் செய்தி
Island edition
··
LankaNews
உள்ளூர்

பெண் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது

நுவரெலியா, மாகஸ்தோட்டை பகுதியில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 2026 நவம்பர் 10ஆம் திகதி நுவரெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாக…

By Site Administrator1 நிமிட வாசிப்பு
பெண் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது

நுவரெலியா, மாகஸ்தோட்டை பகுதியில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர், பொலிஸ் காவலில் இருந்து தப்பிச் சென்றவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கடந்த 2026 நவம்பர் 10ஆம் திகதி நுவரெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாகஸ்தோட்டை பகுதியில் அமைந்துள்ள தங்குமிடமொன்றில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் நுவரெலியா பொலிஸ் நிலையத்திற்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.

இதன்போது, விசாரணை அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவல்களின் அடிப்படையில், கடந்த நவம்பர் 12ஆம் திகதி இரவு நுவரெலியா பேருந்து நிலையத்திற்கு அருகில் வைத்து குறித்த கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

27 வயதுடைய குறித்த சந்தேகநபர் தேரிப்பஹ பகுதியைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளில், கடந்த நவம்பர் 10ஆம் திகதி தேரிப்பஹ பொலிஸ் பிரிவில் பொலிஸ் காவலில் இருந்து தப்பிச் சென்ற நிலையில் தேடப்பட்டு வந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் நுவரெலியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

பகிர்:

About Site Administrator

Lanka News administrator

தொடர்புடைய கட்டுரைகள்

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்கவும்

முதலில் கருத்து தெரிவிக்கவும்