நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்பைப் புதுப்பித்துள்ளது.
இன்று (26) காலை 9.00 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பு, நாளை (27) காலை 9.00 மணி வரை அமுலில் இருக்கும்.
நிலை 2 மண்சரிவு எச்சரிக்கை – அவதானமாக இருக்கவும் (அம்பர்)
களுத்துறை மாவட்டம்: வலல்லாவிட்ட, புலத்சிங்கள பிரதேச செயலகப் பிரிவுகள்.
கேகாலை மாவட்டம்: தெஹியோவிட்ட, கலிகமுவ பிரதேச செயலகப் பிரிவுகள்.
நுவரெலியா மாவட்டம்: அம்பகமுவ கோரளை, நோர்வூட் பிரதேச செயலகப் பிரிவுகள்.
இரத்தினபுரி மாவட்டம்: இரத்தினபுரி, குருவிட்ட, பெல்மதுளை, எலபாத்த, அயகம, நிவித்திகல பிரதேச செயலகப் பிரிவுகள்.
நிலை 1 மண்சரிவு எச்சரிக்கை – விழிப்புடன் இருக்கவும் (மஞ்சள்)
காலி மாவட்டம்: தவலம பிரதேச செயலகப் பிரிவு.
கம்பஹா மாவட்டம்: அத்தனகல்ல பிரதேச செயலகப் பிரிவு.
களுத்துறை மாவட்டம்: மதுராவல, பேருவளை, மில்லனிய, ஹொரணை பிரதேச செயலகப் பிரிவுகள்.
கண்டி மாவட்டம்: உடுதும்பர, பஸ்பாகே கோரளை, உடபலாத்த, உடுநுவர பிரதேச செயலகப் பிரிவுகள்.
கேகாலை மாவட்டம்: கேகாலை, மாவனெல்ல, தெரணியகல, வாரியபொல, அரநாயக்க, ருவன்வெல்ல, யட்டியாந்தோட்டை பிரதேச செயலகப் பிரிவுகள்.
குருநாகல் மாவட்டம்: நாரம்மல, குருநாகல் பிரதேச செயலகப் பிரிவுகள்.
இரத்தினபுரி மாவட்டம்: கிரிஎல்ல, ஓபநாயக்க பிரதேச செயலகப் பிரிவுகள்.
மண்சரிவு அபாயமுள்ள பகுதிகளில் வசிப்போர் எச்சரிக்கையுடன் இருக்குமாறும், அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.




