முக்கியச் செய்தி
Island edition
··
LankaNews
தொழில்நுட்பம்

சிம் அட்டைகளுக்கான கட்டுப்பாடுகளை கடுமையாக்க TRC திட்டம்

முறைசாரா வழிகளில் பெறப்பட்ட சிம் அட்டைகளைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் சட்டவிரோத நடவடிக்கைகள் அதிகரித்துள்ளதாக அறிக்கைகள் கிடைத்துள்ளதால், சிம் அட்டைகள் வழங்குவது தொடர்பில் புதிய கட்டுப்பாட்டு நடவடி…

By Site Administrator1 நிமிட வாசிப்பு
சிம் அட்டைகளுக்கான கட்டுப்பாடுகளை கடுமையாக்க TRC திட்டம்

முறைசாரா வழிகளில் பெறப்பட்ட சிம் அட்டைகளைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் சட்டவிரோத நடவடிக்கைகள் அதிகரித்துள்ளதாக அறிக்கைகள் கிடைத்துள்ளதால், சிம் அட்டைகள் வழங்குவது தொடர்பில் புதிய கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

சட்டத்தை அமுல்படுத்தும் நிறுவனங்களின் கோரிக்கைக்கு அமைய சிம் அட்டைகள் வழங்குவது தொடர்பான விதிமுறைகள் புதுப்பிக்கப்பட்டுள்ளதாக அதன் பணிப்பாளர் நாயகம் பந்துல ஹேரத் தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (10) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இதனைத் தெரிவித்தார்.

புதிய நடைமுறையின் கீழ், இந்த ஆண்டு இறுதிக்குள் புதிய சிம் அட்டைகளைப் பெறும் நபர்களுக்கு நேரடி புகைப்படம் பெறுவதை கட்டாயமாக்க எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.

மேலும், 2027ஆம் ஆண்டில் சிம் அட்டைகளைப் பயன்படுத்தும் அனைத்து வாடிக்கையாளர்களினதும் அடையாளத்தை நூறு சதவீதம் உறுதிப்படுத்தக்கூடிய நடைமுறையொன்றை அமுல்படுத்த எதிர்பார்ப்பதாகவும் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.

இந்த நடைமுறை பொதுமக்களுக்கும் வெளிநாட்டவர்களுக்கும் எந்தவிதமான அசௌகரியமும் ஏற்படாத வகையில் செயல்படுத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

தற்போது நாட்டில் சுமார் 30 மில்லியன் சிம் அட்டைகள் பயன்படுத்தப்படுவதாகவும், சேவையின் தரம் தொடர்பில் பொதுமக்களிடமிருந்து முறைப்பாடுகள் கிடைத்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

பகிர்:

About Site Administrator

Lanka News administrator

தொடர்புடைய கட்டுரைகள்

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்கவும்

முதலில் கருத்து தெரிவிக்கவும்