முக்கியச் செய்தி
Island edition
··
LankaNews
தொழில்நுட்பம்

சிறுவர்களின் திரை பயன்பாடு அதிகரிப்பு

இலங்கையில் முன்பள்ளிப் பருவத்தில் உள்ள சிறுவர்களின் டிஜிட்டல் திரைப் பயன்பாடு வேகமாக அதிகரித்துள்ளதுடன், அந்த வயதுப் பிரிவைச் சேர்ந்த சிறுவர்களில் 64 சதவீதமானோர் நாளொன்றுக்கு ஒரு மணித்தியாலத்திற்கும்…

By Site Administrator1 நிமிட வாசிப்பு
சிறுவர்களின் திரை பயன்பாடு அதிகரிப்பு

இலங்கையில் முன்பள்ளிப் பருவத்தில் உள்ள சிறுவர்களின் டிஜிட்டல் திரைப் பயன்பாடு வேகமாக அதிகரித்துள்ளதுடன், அந்த வயதுப் பிரிவைச் சேர்ந்த சிறுவர்களில் 64 சதவீதமானோர் நாளொன்றுக்கு ஒரு மணித்தியாலத்திற்கும் அதிக நேரத்தை கையடக்கத் தொலைபேசிகள் அல்லது கணினித் திரைகளைப் பார்ப்பதில் செலவிடுவதாக ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.

சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட சுகாதார அமைச்சின் செயலாளர், விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க இதனைத் தெரிவித்தார்.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் பரிந்துரைகளின்படி, சிறுவர்கள் டிஜிட்டல் திரையைப் பார்ப்பது நாளொன்றுக்கு 30 நிமிடங்களுக்கும் குறைவாக இருக்க வேண்டும். எனினும், இலங்கையில் 64 சதவீதமான சிறுவர்கள் அந்த வரம்பை மீறி தினசரி கையடக்கத் தொலைபேசிகள் அல்லது Pad சாதனங்களைப் பயன்படுத்துவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், சிறுவர்களின் தூக்கம், உணவுப் பழக்கம், வாய்ச் சுகாதாரம் மற்றும் தந்தையரின் பங்களிப்பு தொடர்பிலும் இந்த ஆய்வில் பல முக்கிய விடயங்கள் தெரியவந்துள்ளன.

  • தூக்கம்: முன்பள்ளிப் பருவ சிறுவர்களில் சுமார் 32 சதவீதமானோர் நாளொன்றுக்கு பரிந்துரைக்கப்படும் 10–11 மணித்தியாலங்களுக்கும் குறைவாகவே தூங்குகின்றனர்.

  • உணவுப் பழக்கம்: சுமார் 43 சதவீதமான சிறுவர்கள் திரையைப் பார்த்துக்கொண்டே உணவு உண்கின்றனர். இதனால் அவர்கள் உட்கொள்ளும் உணவில் போதிய கவனம் செலுத்துவதில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • வாய்ச் சுகாதாரம்: சுமார் 80 சதவீதமான சிறுவர்கள் நாளொன்றுக்கு இரு முறை பல் துலக்குவதாக ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

  • தந்தையரின் பங்களிப்பு: சிறுவர்களைப் பராமரிப்பது தாயின் மாத்திரம் பொறுப்பு என்ற நிலைப்பாடு காணப்படுவதுடன், சுமார் 53 சதவீதமான தந்தையர்களே சிறுவர்களுடன் நெருக்கமாகச் செயற்படுவதாக தெரியவந்துள்ளது.

சிறுவர்களின் உள மற்றும் உடல் வளர்ச்சிக்காக இந்த நிலைமைகளை உடனடியாக மாற்றுவதற்கு பெற்றோர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க மேலும் வலியுறுத்தினார்.

பகிர்:

About Site Administrator

Lanka News administrator

தொடர்புடைய கட்டுரைகள்

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்கவும்

முதலில் கருத்து தெரிவிக்கவும்