முக்கியச் செய்தி
Island edition
··
LankaNews
தொழில்நுட்பம்

சமூக ஊடகங்களில் சிறுவர்களின் படங்கள் குறித்து அவதானம்

முகநூல் உள்ளிட்ட சமூக ஊடகத் தளங்கள் மூலம் பணம் ஈட்டும் (Monetization) நடைமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, பெற்றோரின் அனுமதியுடனோ அல்லது அனுமதியின்றியோ சிறுவர்களின் புகைப்படங்கள் மற்றும் காண…

By Site Administrator1 நிமிட வாசிப்பு
சமூக ஊடகங்களில் சிறுவர்களின் படங்கள் குறித்து அவதானம்

முகநூல் உள்ளிட்ட சமூக ஊடகத் தளங்கள் மூலம் பணம் ஈட்டும் (Monetization) நடைமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, பெற்றோரின் அனுமதியுடனோ அல்லது அனுமதியின்றியோ சிறுவர்களின் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை இணையத்தில் பதிவேற்றும் நடவடிக்கைகள் அதிகரித்து வருகின்றன.

சிறுவர்களின் திறமைகளை வெளிப்படுத்துவதாகவும், அவர்களின் சுவாரஸ்யமான செயல்பாடுகளைப் பாராட்டுவதாகவும் தெரிவித்து, பல்வேறு நபர்களும் அமைப்புகளும் இவ்வாறான காணொளிகளை வணிக நோக்கங்களுக்காகப் பயன்படுத்தும் சம்பவங்கள் அவதானிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறான காணொளிகள் மற்றும் Vlogs மூலம் சிறுவர்களின் அன்றாட வாழ்க்கை தொடர்பான தகவல்கள் அந்நியர்களுக்கு வெளிப்படுத்தப்படுவது, அவர்களின் தனிப்பட்ட பாதுகாப்புக்கு கடுமையான ஆபத்தை ஏற்படுத்தக்கூடும்.

மேலும், செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, பொருத்தமற்ற அல்லது பாலியல் ரீதியான உள்ளடக்கங்களை உருவாக்குவதற்கு இணையத்தில் பதிவேற்றப்படும் சிறுவர்களின் புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் மூலப்பொருட்களாகப் பயன்படுத்தப்படக்கூடிய அபாயமும் உள்ளது.

எனவே, இத்தகைய ஆபத்தான சூழ்நிலைகளிலிருந்து சிறுவர்களைப் பாதுகாப்பதற்காக, சமூக ஊடகங்களைப் பயன்படுத்தும்போது பெற்றோர்களும் சிறுவர்களின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்புக்குப் பொறுப்பான அனைவரும் அதிக விழிப்புணர்வுடனும் பொறுப்புடனும் செயற்படுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

பகிர்:

About Site Administrator

Lanka News administrator

தொடர்புடைய கட்டுரைகள்

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்கவும்

முதலில் கருத்து தெரிவிக்கவும்