முக்கியச் செய்தி
Island edition
··
LankaNews
தொழில்நுட்பம்

AI வளர்ச்சி குறித்து எச்சரிக்கை: நிறுவனங்களின் பங்குகள் சரிவு

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் வேகமாக வளர்ச்சியடைந்து வருவது தொடர்பில் இத்துறையின் முன்னணி நிறுவனங்களின் தலைவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், உலகம் முழுவதும் AI தொடர்பான நிறுவனங்களின் பங்க…

By Site Administrator1 நிமிட வாசிப்பு
AI வளர்ச்சி குறித்து எச்சரிக்கை: நிறுவனங்களின் பங்குகள் சரிவு

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் வேகமாக வளர்ச்சியடைந்து வருவது தொடர்பில் இத்துறையின் முன்னணி நிறுவனங்களின் தலைவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், உலகம் முழுவதும் AI தொடர்பான நிறுவனங்களின் பங்கு விலைகள் கடுமையாக சரிவடைந்துள்ளன.

Anthropic நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி Dario Amodei, AI வளர்ச்சியின் வேகத்தை ஓரளவு குறைத்து, அதனால் ஏற்படக்கூடிய அபாயங்களை நிர்வகிப்பதற்கு அதிக கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் என அண்மையில் தெரிவித்துள்ளார்.

OpenAI நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி Sam Altman மற்றும் xAI நிறுவனத்தின் தலைவர் Elon Musk ஆகியோரும் AI வளர்ச்சியுடன் தொடர்புடைய அபாயங்கள் குறித்து உடன்பாடு தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில், AI தொழில்நுட்பம் மிகவும் ஆபத்தான நிலையை அடைந்தால் அதனை முழுமையாக நிறுத்தக்கூடிய “Kill Switch” முறையை நிறுவனங்கள் கட்டாயமாகக் கொண்டிருக்க வேண்டும் என்ற யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

Anthropic நிறுவனத்தின் இணை நிறுவனர் Jack Clark மற்றும் அமெரிக்க சட்டமியற்றுநர்கள் குழுவொன்றும் இந்த யோசனையை முன்வைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும், அமெரிக்க ஜனாதிபதி Donald Trump இந்த யோசனைக்கு எதிர்ப்பு தெரிவித்து, AI காரணமாக மனித இனம் அழிவை எதிர்கொள்ளும் என முன்வைக்கப்படும் எச்சரிக்கைகள் ஒரு மோசடி எனக் கூறியுள்ளார்.

பகிர்:

About Site Administrator

Lanka News administrator

தொடர்புடைய கட்டுரைகள்

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்கவும்

முதலில் கருத்து தெரிவிக்கவும்