Marvel ரசிகர்களிடையே அதிக கவனத்தை பெற்றுள்ள Spider-Man: Brand New Day திரைப்படம், சினிமா வரலாற்றில் அதிகமான அமெரிக்க ஆரம்ப வசூல் சாதனையை முறியடித்துள்ளது.
இந்த திரைப்படம் வெளியான முதல் வார இறுதியில் மட்டும் 360 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை பெற்றுள்ளது. இதற்கு முன்னர் இந்த சாதனை 2019 ஆம் ஆண்டு வெளியான Avengers: Endgame திரைப்படத்திடம் இருந்தது. அத்திரைப்படம் ஆரம்ப வார இறுதியில் 357 மில்லியன் டொலர் வசூல் செய்திருந்தது.
இதன் மூலம் Spider-Man: Brand New Day திரைப்படம் Avengers: Endgame திரைப்படத்தின் ஆரம்ப வசூல் சாதனையை முறியடித்துள்ளது. ஒரு வார இறுதியில் 300 மில்லியன் டொலருக்கும் அதிகமான வசூலை பெற்ற இரண்டு திரைப்படங்கள் இவை மட்டுமே என தெரிவிக்கப்படுகிறது.
டாம் ஹொலண்ட் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த திரைப்படம், வெளியான மூன்று நாட்களில் உலகளவில் 932 மில்லியன் அமெரிக்க டொலர் ஆரம்ப வருமானத்தை பெற்றுள்ளது. இது உலகளாவிய ஆரம்ப வசூலில் இரண்டாவது இடத்தை பெற்றுள்ளது. முதல் இடத்தில் 1.2 பில்லியன் டொலர் வசூல் செய்த Avengers: Endgame உள்ளது.
Sony Pictures தலைவர் டாம் ரொத்மன், இந்த வெற்றியைத் தொடர்ந்து படக்குழுவினருக்கு தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளதுடன், இந்த சாதனை குறித்து பெருமைப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.
Destin Daniel Cretton இயக்கியுள்ள Spider-Man: Brand New Day திரைப்படத்தின் கதை Spider-Man: No Way Home திரைப்படத்தின் முடிவுக்குப் பின்னர் ஆரம்பமாகிறது. உலகம் முழுவதும் பீட்டர் பார்க்கரை மறந்த நிலையில், அவர் தனியாக நியூயோர்க் நகரத்தை பாதுகாக்க போராடுகிறார்.
இந்த திரைப்படம் எதிர்காலத்தில் 2 பில்லியன் டொலர் வசூல் எல்லையை எளிதில் கடக்கும் என திரைப்பட விமர்சகர்கள் எதிர்பார்க்கின்றனர்.




