இலங்கை இராணுவமும் வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களமும் இணைந்து முன்னெடுத்த விசேட கூட்டு தேடுதல் நடவடிக்கையின் பின்னர், காணாமல் போயிருந்த ‘அக்போ’ யானை நாச்சதூவ வனப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.
கடந்த சில நாட்களாகக் காணாமல் போயிருந்த இந்த யானையின் சுகாதார நிலை மற்றும் பாதுகாப்பு தொடர்பில் ஆராய்வதற்காக, பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் உத்தரவின் பேரில் நேற்று (19) இந்த விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.




