இலங்கையில் கடந்த ஓராண்டில் புதிதாக 860 எச்.ஐ.வி. தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய பாலியல் நோய் மற்றும் எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டம் தெரிவித்துள்ளது.
உலகளவில் எச்.ஐ.வி. தொற்று அதிகரித்து வரும் 21 நாடுகளில் இலங்கையும் இடம்பெற்றுள்ளதாக அந்தத் திட்டம் தெரிவித்துள்ளது.
இதன்படி, இலங்கையில் இதுவரை பதிவுசெய்யப்பட்ட எச்.ஐ.வி. தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 7,403 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டின் நான்காவது காலாண்டு நிறைவடையும் போது நாடளாவிய ரீதியில் 12 இலட்சத்து 17 ஆயிரத்து 419 பேருக்கு எச்.ஐ.வி. பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.




