முக்கியச் செய்தி
துபாயில் பதுங்கியிருந்த தேடப்படும் குற்றவாளி இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்கொழும்பு, கம்பஹாவில் சில பகுதிகளுக்கு நீர் விநியோகம் இடைநிறுத்தம்ஹேமரத்ன தேரருக்கு எதிரான வழக்கில் தடயவியல் அறிக்கைஇலங்கை கடலில் எண்ணெய், எரிவாயு ஆய்வுக்கு புதிய ஏலம்வெளிநாட்டிலிருந்து சந்தேகநபர் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்துபாயில் பதுங்கியிருந்த தேடப்படும் குற்றவாளி இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்கொழும்பு, கம்பஹாவில் சில பகுதிகளுக்கு நீர் விநியோகம் இடைநிறுத்தம்ஹேமரத்ன தேரருக்கு எதிரான வழக்கில் தடயவியல் அறிக்கைஇலங்கை கடலில் எண்ணெய், எரிவாயு ஆய்வுக்கு புதிய ஏலம்வெளிநாட்டிலிருந்து சந்தேகநபர் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்
Island edition
··
LankaNews
உலகம்

SpaceX உடன் VinSpace ஒப்பந்தம்

வியட்நாமின் VinSpace நிறுவனம் தான் தயாரிக்கும் முதலாவது செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்துவதற்காக அமெரிக்காவின் SpaceX நிறுவனத்துடன் ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி, 2027ஆ…

By Site Administrator1 நிமிட வாசிப்பு
SpaceX உடன் VinSpace ஒப்பந்தம்

வியட்நாமின் VinSpace நிறுவனம் தான் தயாரிக்கும் முதலாவது செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்துவதற்காக அமெரிக்காவின் SpaceX நிறுவனத்துடன் ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தின்படி, 2027ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் SpaceX நிறுவனத்தின் Falcon 9 ரொக்கெட் மூலம் மேற்கொள்ளப்படும் Transporter Rideshare பணித்திட்டத்தின் ஊடாக செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்படவுள்ளன.

செயற்கைக்கோள்களின் ஆராய்ச்சி, மேம்பாடு, உற்பத்தி மற்றும் ஒன்றிணைத்தல் உள்ளிட்ட பணிகளையும், அவை சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்ட பின்னரான முழுமையான செயல்பாடுகளையும் VinSpace நிறுவனம் மேற்கொள்ளவுள்ளது.

2027ஆம் ஆண்டு முன்னெடுக்கப்படவுள்ள இந்த முதலாவது விண்வெளிப் பணித்திட்டத்தின் மூலம், நிறுவனம் சொந்தமாக உருவாக்கிய தொழில்நுட்பங்களை விண்வெளியில் பரிசோதிப்பதுடன், எதிர்கால வர்த்தக விண்வெளி நடவடிக்கைகளுக்கான அடித்தளத்தையும் அமைக்க எதிர்பார்த்துள்ளது.

பகிர்:

About Site Administrator

Lanka News administrator

தொடர்புடைய கட்டுரைகள்

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்கவும்

முதலில் கருத்து தெரிவிக்கவும்