முக்கியச் செய்தி
Island edition
··
LankaNews
உள்ளூர்

FBC பரிசோதனைக்கு அதிக கட்டணம்: யாழ். மருத்துவமனைக்கு ரூ.30 லட்சம் அபராதம்

அரசாங்கம் நிர்ணயித்த கட்டுப்பாட்டு விலையை மீறி FBC (Full Blood Count) பரிசோதனைக்காக அதிக கட்டணம் வசூலித்த யாழ்ப்பாணம் Venus Speciality Hospital (Pvt) Ltd நிறுவனத்திற்கு 30 இலட்சம் ரூபாய் அபராதம் விதிக…

By Site Administrator1 நிமிட வாசிப்பு
FBC பரிசோதனைக்கு அதிக கட்டணம்: யாழ். மருத்துவமனைக்கு ரூ.30 லட்சம் அபராதம்

அரசாங்கம் நிர்ணயித்த கட்டுப்பாட்டு விலையை மீறி FBC (Full Blood Count) பரிசோதனைக்காக அதிக கட்டணம் வசூலித்த யாழ்ப்பாணம் Venus Speciality Hospital (Pvt) Ltd நிறுவனத்திற்கு 30 இலட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபையின் விதிமுறைகளின்படி, தனியார் ஆய்வகங்கள் மற்றும் மருத்துவமனைகள் FBC பரிசோதனைக்காக அதிகபட்சமாக 400 ரூபாய் மட்டுமே அறவிட முடியும்.

எனினும், யாழ்ப்பாணம், பலாலி வீதி, கந்தர்மடம் பகுதியில் அமைந்துள்ள குறித்த மருத்துவமனை FBC பரிசோதனைக்காக நோயாளிகளிடமிருந்து 550 ரூபாய் வீதம் வசூலித்தமை கண்டறியப்பட்டுள்ளது.

2026 ஜூலை 13 ஆம் திகதி நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின்போது இந்த சட்டவிரோத அதிக கட்டண அறவீடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், 2026 ஜூலை 21 ஆம் திகதி வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது மருத்துவமனை நிர்வாகம் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, நீதவான் குறித்த மருத்துவமனைக்கு 30 இலட்சம் ரூபாய் அபராதம் விதித்ததுடன், மேற்கொண்ட குற்றம் தொடர்பில் மருத்துவமனையின் சொந்த செலவில் பிரதான பத்திரிகைகளில் அறிவிப்பு வெளியிடவும் உத்தரவிட்டுள்ளார்.

பகிர்:

About Site Administrator

Lanka News administrator

தொடர்புடைய கட்டுரைகள்

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்கவும்

முதலில் கருத்து தெரிவிக்கவும்