முக்கியச் செய்தி
Island edition
··
LankaNews
உள்ளூர்

சமூக அடிப்படையிலான சீர்திருத்தச் சட்டத்தில் திருத்தம்

குற்றவாளிகளைக் கண்காணிக்கும் நடைமுறையை மேலும் வலுப்படுத்துதல், சமூக சேவை உத்தரவுகளுக்கான புதிய நடைமுறைகளை அறிமுகப்படுத்துதல் மற்றும் நிபந்தனைகளை மீறுவதற்கான அபராதங்களை அதிகரித்தல் ஆகிய நோக்கங்களுடன் ச…

By Site Administrator1 நிமிட வாசிப்பு
சமூக அடிப்படையிலான சீர்திருத்தச் சட்டத்தில் திருத்தம்

குற்றவாளிகளைக் கண்காணிக்கும் நடைமுறையை மேலும் வலுப்படுத்துதல், சமூக சேவை உத்தரவுகளுக்கான புதிய நடைமுறைகளை அறிமுகப்படுத்துதல் மற்றும் நிபந்தனைகளை மீறுவதற்கான அபராதங்களை அதிகரித்தல் ஆகிய நோக்கங்களுடன் சமூக அடிப்படையிலான சீர்திருத்தச் சட்டத்தைத் திருத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்கமைய, 1999 ஆம் ஆண்டின் 46 ஆம் இலக்க சமூக அடிப்படையிலான சீர்திருத்தச் சட்டத்தைத் திருத்துவதற்கான சட்டமூலம், 2026 ஒக்டோபர் 13 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் மூலம் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

முன்மொழியப்பட்டுள்ள புதிய சட்ட ஏற்பாடுகளின்படி, தகுதியுடைய குற்றவாளிகளை சமூக அடிப்படையிலான சீர்திருத்த அதிகாரியிடம் அனுப்புவதற்கு நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும். குறித்த குற்றவாளி சமூக அடிப்படையிலான சீர்திருத்த உத்தரவை ஏற்றுக்கொள்வதா இல்லையா என்பதைத் தீர்மானிப்பதற்கு முன்னர், அந்த உத்தரவின் நன்மைகள் மற்றும் பயன்கள் குறித்து அதிகாரி அவருக்கு விளக்கமளிக்க வேண்டும்.

தமது முடிவை நீதிமன்றத்திற்குத் தெரிவிப்பதற்காக, சனி, ஞாயிறு மற்றும் அரச விடுமுறை நாட்களைத் தவிர்த்து, குற்றவாளிகளுக்கு தொடர்ச்சியான 48 மணிநேர கால அவகாசம் வழங்கப்படவுள்ளது.

மேலும், தற்போதைய சட்டத்தின் 14 ஆவது பிரிவின் கீழ் அறவிடக்கூடிய அதிகபட்ச அபராதத்தை 5,000 ரூபாவிலிருந்து 25,000 ரூபாவாக அதிகரிப்பதற்கும் சட்டமூலம் முன்மொழிகிறது.

இதனுடன், விதிக்கப்படும் சிறைத்தண்டனைக் காலம் அல்லது அபராதத் தொகையின் அடிப்படையில் குற்றவாளிகள் நிறைவேற்ற வேண்டிய ஊதியமற்ற சமூக சேவை மணிநேரங்களைத் தீர்மானிக்கும் திருத்தப்பட்ட அட்டவணையொன்றை அறிமுகப்படுத்துவதற்கும் முன்மொழியப்பட்டுள்ளது.

பகிர்:

About Site Administrator

Lanka News administrator

தொடர்புடைய கட்டுரைகள்

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்கவும்

முதலில் கருத்து தெரிவிக்கவும்