‘ஜனவரமே புரவெசியோ’ (Janavarame Puravesiyo) அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டம் இன்று (17) கொழும்பிலுள்ள ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக நடைபெற்றது.
‘ஊழல்வாதிகளுக்குத் தண்டனை வழங்குவதைத் தடுக்கும் சதிகளைத் தோற்கடிப்போம்’ என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுப்பதைத் தடுப்பதற்காக மேற்கொள்ளப்படுவதாகக் கூறப்படும் முயற்சிகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் கடுமையாகக் கண்டித்தனர்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் முதலில் கொழும்பு கோட்டை பகுதியில் ஒன்றுகூடிய பின்னர், காலி முகத்திடல் நோக்கிப் பேரணியாகச் சென்று ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.




