பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட பயணிகளின் வசதிக்காக, பொல்கஹவெல மற்றும் பேராதனைக்கு இடையில் புதிய ரயில் சேவை இன்று (12) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
டித்வா சூறாவளி காரணமாக ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், மலையக ரயில் பாதையில் ரம்புக்கனை மற்றும் கம்பளை இடையிலான ரயில் சேவைகள் ஒக்டோபர் 2ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. தற்போது இந்தப் பகுதியில் ரயில் சேவைகள் வழமைபோல் இடம்பெற்று வருகின்றன.
இதற்கமைய, பொல்கஹவெல மற்றும் பேராதனைக்கு இடையில் பயணிக்கும் பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட ஏனைய பயணிகளின் வசதியைக் கருத்திற்கொண்டு, இன்று முதல் தினமும் இந்தப் புதிய ரயில் சேவையை இயக்குவதற்கு ரயில்வே திணைக்களம் திட்டமிட்டுள்ளது.




