பனாகொட பகுதியில் 65 வயதான பாதசாரி ஒருவரை வாகனத்தால் மோதிய சம்பவம் தொடர்பில் தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சந்தன சூரியஆராச்சி அதுருகிரிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று (07) இரவு பாராளுமன்ற உறுப்பினர் செலுத்திய கார் பாதசாரி மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் காயமடைந்த நபர் மருத்துவ சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் அதுருகிரிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




