மூன்று நிகாயக்களின் மகாநாயக்க தேரர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சங்கத்தினருக்கும் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் இன்று (08) நடைபெறவுள்ளது.
தண்டனை அனுபவித்து தடுப்புக்காவலில் உள்ள வணக்கத்திற்குரிய கலகொடஅத்தே ஞானசார தேரர் தொடர்பில் மூன்று நிகாயக்களின் மகாநாயக்க தேரர்கள் நீதித்துறை மற்றும் சிறைச்சாலைகள் விவகார அமைச்சருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர்.
இந்த விடயம் தொடர்பாக மூன்று நிகாயக்களின் மகாநாயக்க தேரர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சங்கத்தினருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் இந்த விசேட கலந்துரையாடலை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த கலந்துரையாடல் இன்று (08) பிற்பகல் 1.00 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளதாக அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் எச்.எஸ்.கே.ஜே. பண்டார தெரிவித்துள்ளார்.




