முக்கியச் செய்தி
Island edition
··
LankaNews
உள்ளூர்

அனோஜனின் மரண தண்டனையை இரத்துச் செய்யுங்கள்

சவூதி அரேபியாவினால் இலங்கை இளைஞரான சிவராசா அனோஜனுக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனையை உடனடியாக இரத்துச் செய்ய வேண்டும் என அம்னஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. அந்த அமைப்பு வெளியிட்டுள்…

By Site Administrator1 நிமிட வாசிப்பு
அனோஜனின் மரண தண்டனையை இரத்துச் செய்யுங்கள்

சவூதி அரேபியாவினால் இலங்கை இளைஞரான சிவராசா அனோஜனுக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனையை உடனடியாக இரத்துச் செய்ய வேண்டும் என அம்னஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், அனோஜனுக்கு எதிரான குற்றச்சாட்டு கருத்து வெளியிடும் உரிமையுடன் தொடர்புடையது என்பதால், அவரை உடனடியாகவும் நிபந்தனையின்றியும் விடுதலை செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளது.

நபிகள் நாயகம் முஹம்மது அவர்களை அவமதிக்கும் வகையிலான கருத்தொன்றை தனது சமூக ஊடகக் கணக்கில் பதிவிட்டதாகக் கூறி சிவராசா அனோஜன் கைது செய்யப்பட்டிருந்தார். பின்னர் சவூதி அரேபிய மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

ஒருவர் தனது கருத்தை வெளிப்படுத்தியதற்காக மாத்திரம் சிறையில் அடைக்கப்படவோ அல்லது மரண தண்டனை போன்ற தண்டனைக்கு உட்படுத்தப்படவோ கூடாது என அம்னஸ்டி இன்டர்நேஷனல் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள அனோஜனின் நிலைமை குறித்து ஆராய்வதற்காக சவூதி அரேபியாவிலுள்ள இலங்கைத் தூதுவர் இன்று (08) அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ள தம்மாம் சிறைச்சாலைக்குச் செல்லவுள்ளார்.

சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தபோது மற்றொரு கைதியினால் அனோஜன் தாக்கப்பட்டு காயமடைந்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பிலும் தூதுவர் விசாரணை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனிடையே, அனோஜனுக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனை தொடர்பாக சவூதி அரேபிய உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்வதற்காக சவூதி அரேபியா சென்றுள்ள இலங்கைப் பிரதிநிதிகள் குழுவினர் இன்றும் அது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் பைசர் முஸ்தபா, நேற்று (07) சவூதி அரேபிய சட்டத்தரணிகளிடம் இது தொடர்பாக சட்ட ஆலோசனைகளைப் பெற்றதாகத் தெரிவித்தார்.

எதிர்வரும் 17ஆம் திகதிக்கு முன்னர் அனோஜனின் மேன்முறையீட்டை தாக்கல் செய்ய எதிர்பார்ப்பதாகவும் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

பகிர்:

About Site Administrator

Lanka News administrator

தொடர்புடைய கட்டுரைகள்

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்கவும்

முதலில் கருத்து தெரிவிக்கவும்