2026.09.27 அன்று பத்தேகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் முச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்த ஆண் ஒருவர் மற்றும் இரண்டு பெண்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி கொலை செய்த சம்பவம் தொடர்பில் காலி மாவட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.
இதன்படி, 2026.10.04 அன்று அதிகாலை அம்பலாங்கொடை பிரதேசத்தில் வைத்து குறித்த குற்றச் சம்பவத்திற்கு உதவி மற்றும் ஆதரவு வழங்கியதாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் காலி மாவட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கரந்தெனிய பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர் 48 மணிநேர தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் காலி மாவட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டு மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.




