முக்கியச் செய்தி
Island edition
··
LankaNews
உள்ளூர்

துப்பாக்கிச் சூட்டில் 74 வயது நபர் காயம் – சந்தேகநபர் கைது

2026.10.04 அன்று அதிகாலை அஹுங்கல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்வேஹெர பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்த 74 வயதுடைய நபர் ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி காயப்படுத்திய சம்பவம் தொடர்பில் காலி மாவட்ட…

By Site Administrator1 நிமிட வாசிப்பு
துப்பாக்கிச் சூட்டில் 74 வயது நபர் காயம் – சந்தேகநபர் கைது

2026.10.04 அன்று அதிகாலை அஹுங்கல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்வேஹெர பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்த 74 வயதுடைய நபர் ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி காயப்படுத்திய சம்பவம் தொடர்பில் காலி மாவட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்திருந்தது.

இதன்படி, 2026.10.04 அன்று பிற்பகல் அஹுங்கல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்வேஹெர பிரதேசத்தில் வைத்து குறித்த குற்றச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் விசாரணை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் அஹுங்கல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின்போது கிடைத்த தகவல்களின் அடிப்படையில், குறித்த குற்றச் சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் கைத்துப்பாக்கி ஒன்றும் கல்வேஹெர பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

காலி மாவட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பகிர்:

About Site Administrator

Lanka News administrator

தொடர்புடைய கட்டுரைகள்

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்கவும்

முதலில் கருத்து தெரிவிக்கவும்