பலத்த மின்னல் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை அறிவித்தலொன்றை வெளியிட்டுள்ளது.
இன்று (05) காலை 11.00 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த அறிவித்தல் நாளை (06) அதிகாலை 1.00 மணி வரை அமுலில் இருக்கும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, வடமேல், மத்திய, சப்ரகமுவ, ஊவா, மேல், தென் மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மன்னார் மாவட்டத்திலும் மாலை அல்லது இரவு வேளைகளில் இடையிடையே இடியுடன் கூடிய மழையுடன் பலத்த மின்னல் ஏற்படுவதற்கான அதிக வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் குறித்த பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் என திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
எனவே, மின்னல் தாக்கத்தினால் ஏற்படக்கூடிய அனர்த்தங்களைக் குறைத்துக்கொள்ள தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களிடம் வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.




