முக்கியச் செய்தி
Island edition
··
LankaNews
உள்ளூர்

சுரேஷ் சலேயின் மருத்துவக் குழுவைச் சேர்ந்த 10 பேருக்கு அழைப்பாணை

முன்னாள் அரச புலனாய்வுச் சேவை பணிப்பாளரும் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான சுரேஷ் சலேயின் மருத்துவக் குழுவைச் சேர்ந்த 10 மருத்துவர்களை எதிர்வரும் ஒக்டோபர் 06 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு கொழும…

By Site Administrator1 நிமிட வாசிப்பு
சுரேஷ் சலேயின் மருத்துவக் குழுவைச் சேர்ந்த 10 பேருக்கு அழைப்பாணை

முன்னாள் அரச புலனாய்வுச் சேவை பணிப்பாளரும் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான சுரேஷ் சலேயின் மருத்துவக் குழுவைச் சேர்ந்த 10 மருத்துவர்களை எதிர்வரும் ஒக்டோபர் 06 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு கொழும்பு நீதவான் பசன் அமரசேகர அழைப்பாணை பிறப்பித்துள்ளார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் நகர்த்தல் பத்திரம் மூலம் முன்வைக்கப்பட்ட விடயங்களை பரிசீலித்த பின்னர் நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்டு தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேயின் இதயம் வீக்கமடைந்துள்ளதாகவும், அதைக் கட்டுப்படுத்துவதற்காக இதயத்தில் ஒரு மருத்துவச் சாதனம் பொருத்தப்பட்டுள்ளதாகவும் அண்மையில் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

அவரது சுகாதார நிலை தொடர்பில் மருத்துவக் குழுவொன்றினால் வெளியிடப்பட்ட அறிக்கையின் அடிப்படையில் இந்த விடயங்கள் நீதிமன்றத்தில் தெரியவந்தன.


பகிர்:

About Site Administrator

Lanka News administrator

தொடர்புடைய கட்டுரைகள்

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்கவும்

முதலில் கருத்து தெரிவிக்கவும்