முக்கியச் செய்தி
Island edition
··
LankaNews
உள்ளூர்

குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம் தொடர்பில் கலந்துரையாடல்

2005 ஆம் ஆண்டின் 34 ஆம் இலக்க குடும்ப வன்முறைத் தடுப்புச் சட்டத்தை மிகவும் முறையாகவும் பயனுள்ள வகையிலும் நடைமுறைப்படுத்துவதற்காக மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள் தொடர்பான விசேட கலந்துரையாடல் நாடாளுமன்ற…

By Site Administrator1 நிமிட வாசிப்பு
குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம் தொடர்பில் கலந்துரையாடல்

2005 ஆம் ஆண்டின் 34 ஆம் இலக்க குடும்ப வன்முறைத் தடுப்புச் சட்டத்தை மிகவும் முறையாகவும் பயனுள்ள வகையிலும் நடைமுறைப்படுத்துவதற்காக மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள் தொடர்பான விசேட கலந்துரையாடல் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெண்கள் ஒன்றியத்தில் இடம்பெற்றது.

ஒன்றியத்தின் தலைவி அமைச்சர் சரோஜா சாவித்ரி போல் ராஜ் கலந்துகொள்ளாத நிலையில், பிரதி இணைத் தலைவிகளான சட்டத்தரணி சமிந்திராணி கிரியெல்ல மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சமன்மலி குணசிங்க ஆகியோரின் தலைமையில் இந்தக் கூட்டம் அண்மையில் நாடாளுமன்ற வளாகத்தில் இடம்பெற்றது.

குடும்ப வன்முறையைத் தடுப்பதுடன், அதனால் பாதிக்கப்படும் தரப்பினருக்கு துரிதமாக சட்டப் பாதுகாப்பை வழங்குவதை உறுதி செய்வதற்காக முன்மொழியப்பட்டுள்ள புதிய சட்டமூலம் தொடர்பில் முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி மற்றும் செயற்பாட்டு மன்றத்தினால் பல்வேறு விடயங்கள் முன்வைக்கப்பட்டன.

வன்முறையால் பாதிக்கப்படும் பெரியவர்கள் மற்றும் சிறுவர்களுக்காக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடிய தனிநபர்கள் மற்றும் அதிகாரிகளின் அதிகார வரம்பை விரிவுபடுத்துதல், விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் நடைமுறையை எளிமைப்படுத்துதல், இடைக்கால பாதுகாப்பு உத்தரவுகள் மற்றும் பாதுகாப்பு உத்தரவுகள் தொடர்பான பின்தொடர்தல் பொறிமுறைகளை வலுப்படுத்துதல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டது.

குடும்ப வன்முறைக்கு உள்ளாகும் பெண்கள் எதிர்கொள்ளும் உண்மையான நடைமுறை அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு, சட்ட ரீதியான மற்றும் நிறுவன ரீதியான சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டியதன் அவசியமும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.

பகிர்:

About Site Administrator

Lanka News administrator

தொடர்புடைய கட்டுரைகள்

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்கவும்

முதலில் கருத்து தெரிவிக்கவும்