வடமேல், மத்திய, சபரகமுவ, ஊவா, மேல் மற்றும் வடமத்திய மாகாணங்கள் உள்ளிட்ட காலி, மாத்தறை மற்றும் மன்னார் மாவட்டங்களுக்குப் பலத்த மின்னல் தொடர்பான எச்சரிக்கை அறிவிப்பை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
இந்த அறிவிப்பு இன்று (02) இரவு 11.30 மணி வரை அமுலில் இருக்கும்.
அதன்படி, குறித்த மாகாணங்கள் மற்றும் மாவட்டங்களில் பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் சில இடங்களில் இடியுடன் கூடிய மழையுடன் பலத்த மின்னல் ஏற்படுவதற்கான அதிக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மின்னல் தாக்கத்தினால் ஏற்படக்கூடிய அனர்த்தங்களைத் தவிர்ப்பதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களிடம் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.




