முக்கியச் செய்தி
Island edition
··
LankaNews
உள்ளூர்

மோட்டார் சைக்கிள் விபத்தில் இரு சகோதரர்கள் பலி

மாதம்பே – குளியாப்பிட்டிய வீதியின் ஹலபண்டாரகம பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சகோதரர்கள் உயிரிழந்துள்ளதுடன், அவர்களின் தாயார் படுகாயமடைந்துள…

By Site Administrator1 நிமிட வாசிப்பு
மோட்டார் சைக்கிள் விபத்தில் இரு சகோதரர்கள் பலி

மாதம்பே – குளியாப்பிட்டிய வீதியின் ஹலபண்டாரகம பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சகோதரர்கள் உயிரிழந்துள்ளதுடன், அவர்களின் தாயார் படுகாயமடைந்துள்ளார்.

அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகி மின்விளக்குக் கம்பத்தில் மோதியதில் இன்று அதிகாலை சுமார் 5.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர்கள் தும்மலசூரிய, வீரகொடியான பகுதியைச் சேர்ந்த 17 மற்றும் 11 வயதுடைய சகோதரர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த அவர்களின் தாயார் சிலாபம் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகின்றார்.

விபத்து தொடர்பில் மாதம்பே பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பகிர்:

About Site Administrator

Lanka News administrator

தொடர்புடைய கட்டுரைகள்

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்கவும்

முதலில் கருத்து தெரிவிக்கவும்