ஹல்பெதொட்ட, பத்தேகம பகுதியில் காரில் வந்த துப்பாக்கிதாரி ஒருவர் பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கர வண்டி மீது துப்பாக்கிச் சூடு நடத்தும் காட்சிகள் அடங்கிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
குறித்த கார் சம்பவ இடத்திற்கு வந்த பின்னர், அதிலிருந்து இறங்கிய துப்பாக்கிதாரி வீதியில் பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கர வண்டி மீது துப்பாக்கிச் சூடு நடத்தும் காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியுள்ளன.
துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த துப்பாக்கிச் சூட்டில் பல பெண்களும் காயமடைந்து சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தாக்குதலுக்கு பொறுப்பானவர்களை அடையாளம் கண்டு கைது செய்வதற்காக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.




