முக்கியச் செய்தி
Island edition
··
LankaNews
உள்ளூர்

சீரற்ற வானிலையால் 15 மாவட்டங்கள் பாதிப்பு

நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக 15 மாவட்டங்களில் உள்ள 104 பிரதேச செயலகப் பிரிவுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. கடந்த 19ஆம் திகதி முதல் இன்று (27) காலை 6.00…

By Site Administrator1 நிமிட வாசிப்பு
சீரற்ற வானிலையால் 15 மாவட்டங்கள் பாதிப்பு

நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக 15 மாவட்டங்களில் உள்ள 104 பிரதேச செயலகப் பிரிவுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

கடந்த 19ஆம் திகதி முதல் இன்று (27) காலை 6.00 மணி வரையான காலப்பகுதியில், குறித்த பிரதேச செயலகப் பிரிவுகளில் 943 குடும்பங்களைச் சேர்ந்த 3,495 பேர் சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த நிலையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலைமையின் காரணமாக 3 பேர் உயிரிழந்துள்ளதுடன், 5 பேர் காயமடைந்துள்ளதாகவும் ஒருவர் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சீரற்ற வானிலை காரணமாக 2 முழுமையான வீட்டு சேதங்களும் 448 பகுதியளவிலான வீட்டு சேதங்களும் பதிவாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

அத்துடன், 5 பாதுகாப்பு நிலையங்களில் 36 குடும்பங்களைச் சேர்ந்த 124 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது.

நிலவிய கடும் மழையால் அதிகளவில் பாதிக்கப்பட்ட மாவட்டமாக கண்டி மாவட்டம் பதிவாகியுள்ளது. அங்கு 782 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக, இரத்தினபுரி மாவட்டத்தில் 688 பேரும், கம்பஹா மாவட்டத்தில் 473 பேரும், மாத்தறை மாவட்டத்தில் 383 பேரும், புத்தளம் மாவட்டத்தில் 310 பேரும், கேகாலை மாவட்டத்தில் 224 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகிர்:

About Site Administrator

Lanka News administrator

தொடர்புடைய கட்டுரைகள்

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்கவும்

முதலில் கருத்து தெரிவிக்கவும்